Date:

அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2,500 ரூபா அபராதமாகச் செலுத்தியே , தேசிய அடையாள அட்டையைப் பெற வேண்டுமென  அறிவிக்கப்படவுள்ளது.

40 வயதிற்கு மேற்பட்ட மற்றும் அடையாள அட்டை இல்லாமல் இருப்பவர்களே இவ்வாறு ரூபாய் 2500 செலுத்தி, அடையாள அட்டையைப் பெற  வேண்டுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தேசிய அடையாள அட்டை பெறாத குற்றத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்ப்பதற்காக இந்த அபராதம் விதிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், உயர்த்தப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த முடியாத குறைந்த வருமானம் பெறும் நபர்களிடமிருந்து மட்டும், முன்னர் அறிவிடப்படும் அபராதத் தொகையான 250 ரூபாவை வசூலிக்க ஆட்திவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி கையொப்பமிட்ட கடிதம் மூலம் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பஸ் கட்டண அதிகரிப்பு யோசனை நாளை

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை 10 வீதத்தினால் அதிகரிப்பதற்கு...

பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க…

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான…

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம்...

Breakingஇஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: இலங்கையர் நால்வர் காயம்

இஸ்ரேலின் டிமோனா பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை வீடியோ எடுக்க...