Date:

நொடிப்பொழுதில் போதையளிக்கும் புதுவகை போதைப்பொருள்: வைத்தியர்கள் அதிர்ச்சி

உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில் “ஜோம்பி டிரக்” என பெயரிடப்பட்ட புதுவகை போதைப்பொருளை அதிகளவு எடுத்து கொண்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகிறது.

இதனை எவ்வாறு கையாள்வது என அங்குள்ள மருத்துவர்கள் திகைத்து வருகின்றனர்.

அமெரிக்காவில் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். அந்நாட்டில் இது ஒரு மிகப்பெரும் சமூக பிரச்சனையாக மாறி வருவதாக உளவியல் வல்லுனர்களும், பொலிஸாரும், போதைப்பொருள் தடுப்பு துறையினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

அங்கு சமீப காலங்களில் அளவுக்கு மீறி போதைப்பொருள் எடுத்து கொள்வதால் ஏற்படும் விளைவுகள் அதிகரித்து இருக்கிறது.

இந்நிலையில், “ஜோம்பி டிரக்” என பெயரிடப்பட்ட புதுவகை போதைப்பொருளை அதிகளவு எடுத்து கொண்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகிறது.

“டிரான்க்யூ” என அமெரிக்காவில் அழைக்கப்படும் இந்த போதை மருந்து, அடங்காத மாடுகளையும், குதிரைகளையும் அடக்க உபயோகப்படுத்தப்படும் ஒரு தூக்க மருந்தாக, மிருகங்கள் இடையே பயன்படுத்தபட்டு வந்தது.

தற்போது அமெரிக்கா முழுவதும் அது சட்டவிரோதமாகவும், பரவலாக கருப்பு சந்தையில் விற்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் ஃபெண்டனில் அல்லது ஹெராயின் போன்ற பிற போதை மருந்துகளுடன் இதனை கலந்து விற்பனை செய்கின்றனர்.

இதனால் ஏற்படும் போதை அதிகமாக உள்ளதால், போதைப்பொருள் பழக்கம் உள்ளவர்களிடையே இதற்கு அதிகம் வரவேற்பு இருக்கிறது.

“கொகைன் மற்றும் ஹெராயின் போன்ற போதை மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டவர்களை காப்பதற்காக கொடுக்கப்படும் மருந்துகள், அவர்கள் உடலில் எதிர்பார்த்தது போல் வேலை செய்யும்.

ஆனால் இந்த புதுவகை போதைப்பொருளான டிரான்க்யூ அளவுக்கு அதிகமானால் அதை எடுத்து கொள்பவர்களின் உயிரை காப்பது கடினமாக உள்ளது. அவசர சிகிச்சை பிரிவிற்கு வருபவர்களுக்கு பெரும்பாலும் இதய துடிப்பு குறைவதும், இரத்த அழுத்தம் வீழ்வதும் தடுக்க முடியாததாகி விடுகிறது,” என போதைப்பழக்க நோயாளிகளை காக்கும் துறையில் நிபுணரான மருத்துவர் பவோலோ கொப்போலா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் தரவுகளின் படி போதை மருந்துகளை அளவுக்கு மீறி உட்கொள்வதால் நிகழும் மரணங்கள் அமெரிக்காவில் 5 நிமிடத்திற்கு 1 எனும் அதிர்ச்சியூட்டும் விகிதத்தில் நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை...

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...

மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு...