Date:

வெளிநாடுகளுக்குச் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு சிக்கல்!

வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டிய மஞ்சள் காமாலை தடுப்பூசி தற்போது நாட்டில் இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச சுகாதார விதிகளுக்கமைய, இந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தடுப்பூசியைப் பெற வேண்டும்.

ஆனால் நாட்டில் தடுப்பூசி இல்லாததால், மஞ்சள் காமாலை பரவும் நாடுகளுக்குச் செல்வதன் மூலம் நோய் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கமைய, மஞ்சள் காமாலையை தடுப்பது இன்றியமையாத பொறுப்பாகும், மேலும் நிலைமையைக் கட்டுப்படுத்த, eliminating yellow fever epidemic eye 2026 எனப்படும் சர்வதேச திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் அந்த திட்டத்திற்கமைய செயல்பட வேண்டும்.

பல துறைகளில் பலவீனங்கள் காணப்படுவதனால் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெரும் அவப்பெயர் ஏற்படலாம் எனவும் நிபுணர் கலாநிதி சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...