Date:

ஆசிய கிண்ணம் – இலங்கை அணி அறிவிப்பு!

2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அணித்தலைவராக தசுன் சானக்கவும் , உப தலைவராக குசல் மெந்திஸும் பெயரிடப்பட்டுள்ளனர்.

முன்னதாக அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் அடைந்ததன் காரணமாக இறுதி அணிக்கு தெரிவு செய்யப்படவில்லை என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பினுர பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோருக்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதல் பெறப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகவீனமுற்றுள்ள குசல் ஜனித் பெரேரா பூரண குணமடைந்த பின்னர் அணியில் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பஸ் கட்டண அதிகரிப்பு யோசனை நாளை

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை 10 வீதத்தினால் அதிகரிப்பதற்கு...

பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க…

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான…

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம்...

Breakingஇஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: இலங்கையர் நால்வர் காயம்

இஸ்ரேலின் டிமோனா பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை வீடியோ எடுக்க...