கொழும்பு மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு (24) இடம்பெற்றதாக பிரபா கணேசன் எமது நியூஸ் தமிழ் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்
ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மட்டக்குளிய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது வெட்டுக்காயங்களுடன் வீதியில் வீழ்ந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் மோதலில் ஈடுபட்ட மற்றுமொருவர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
மேலும் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்து