எல்.பி.எல் ஆரம்ப நிகழ்வின் போது பிரபல பாடகி உமாரா சின்ஹவன்சவினால் இசைக்கப்பட்ட தேசிய கீதம், அரசியலமைப்பில் விவரிக்கப்பட்டுள்ள ராகத்தின் அடிப்படையில் இசைக்கப்படவில்லையென பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையானது கடந்த வெள்ளிக்கிழமை (18) அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
அரசியலமைப்பில் தேசிய கீதத்திற்கான ராகம் மிதமான தொனியில் பாடும்படியாகத் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உமாரா உயர் சுருதியில் பாடியுள்ளார். உயர் சுருதியில் பாடும் போது தேசிய கீதத்தின் முக்கிய வரியும் திரிபுபடைந்து விட்டது.
எனவே இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்டமா அதிபரை நாடுமாறு குறித்த குழுவிற்கு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
நிகழ்வுகளில் தேசிய கீதத்தைப் இசைக்கும் போது, பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கூடிய விரைவில் இணைக்குமாறு குழு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.