34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம்!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

பத்தரமுல்லையில் இடம்பெற்ற அரசாங்க நிலை அளவையாளர் திணைக்கள சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

நாட்டில் ஏற்படும் பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்குப் போதுமான அளவிலான ரூபாய்கள் கைவசம் உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இருப்பினும் வெளிவாரி அதிர்ச்சியொன்றை எதிர்கொள்ளும் அளவுக்குப் பொருளாதாரம் வலுவாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

 

திறைசேரிக்கு கிடைக்கும் செல்வத்தை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை அரச சேவையே செய்ய வேண்டும்.

அதற்கு வலுவான அரச இயந்திரம் அவசியம் என்றும், தற்போதைய அரசாங்கம் அதை உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இருப்பினும், நாட்டின் அரச சேவை ஈர்க்கக்கூடியதாக இல்லாததால், பலரும் அதனை விட்டு விலகிச் செல்வதாகவும், தொழில் வல்லுநர்களைத் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய அரச சேவை நாட்டில் உருவாக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய கடினமான பின்னணியில் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டதுடன், 2027ஆம் ஆண்டில் சம்பளத்தை அதிகரிப்பதற்கு 110 பில்லியன் ரூபா தேவைப்படுவதால், இந்த வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அங்கு வலியுறுத்தினார்.

 

 

 

2028ஆம் ஆண்டில் கொடுப்பனவுகளை வழங்குவது குறித்துப் பெருமளவில் கவனம் செலுத்தப்படும் என்றும், அந்த ஆண்டில் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

 

இருப்பினும், அரச சேவையில் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அத்தியாவசியமான கொடுப்பனவுகள் குறித்துக் கவனம் செலுத்தப்படும்.

 

தொழில்முறை அரச சேவையில் பல வெற்றிடங்கள் நிலவும் அதேவேளை, கடந்த காலத்தில் வழங்கப்பட்ட அரசியல் நியமனங்கள் காரணமாக கீழ்மட்டப் பதவிகள் நிரம்பி வழிகின்றன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

எனவே, சில அரச நிறுவனங்களை மூடுவதற்கும், சிலவற்றை ஒருங்கிணைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிதி அமைச்சினால் 34 அரச நிறுவனங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி விஹாரமஹாதேவி. பூங்காவில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உலபனே சுமலங்க...

நாமல் ராஜபக்ஷ நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.   இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை...