Date:

மாடியில் இருந்து கீழே விழுந்து பல்கலை மாணவர் பலி

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் விடுதி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஹோமாகம, தியகமவில் உள்ள தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் 26 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த நிலையில், மாணவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதுடன், கட்டிடத்தில் இருந்து மாணவன் வீழ்ந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், உயிரிழந்த மாணவர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்ற சந்தேகம் நிலவுவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...