விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபடும் பிக்குகள் நீதிமன்றுக்கு

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி விஹாரமஹாதேவி. பூங்காவில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உலபனே சுமலங்க தேரர், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மற்றும் குழுவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று (23) முற்பகல் வருகை தந்தனர்.

 

 

விஹாரமஹாதேவி பூங்காவிற்கு முன்பாக உள்ள புத்தர் சிலை அமைந்துள்ள வளாகம் உள்ளிட்ட பல இடங்களிலும், பல வீதிகளிலும் தொடர்ச்சியாகத் தங்கியிருப்பதிலிருந்து தவிர்க்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் மூலம் நீதிமன்றத்தில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்காகவே அவர்கள் அங்கு வருகை தந்திருந்தனர்.

 

 

இவர்களுடன் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி உள்ளிட்ட பல பிக்குகளும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

இதனிடையே, விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளுக்கு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகக் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் நேற்று (22) மாலை போராட்டக் களத்திற்குச் சென்று நீதிமன்ற உத்தரவைக் கையளித்திருந்தனர்.

 

 

எவ்வாறாயினும், விஹாரமஹாதேவி பூங்கா வளாகத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதிலும், பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்தும் அந்தப் பூங்காவிலேயே தங்கியுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம்!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.   பத்தரமுல்லையில் இடம்பெற்ற அரசாங்க நிலை அளவையாளர் திணைக்கள...

நாமல் ராஜபக்ஷ நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.   இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை...