கடுமையான நிதி நெருக்கடியையடுத்து அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அலைவரிசை ஐ யினை, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. சனல் ஐ யின் ஒளிபரப்பு நேரம் தற்போது லைக்கா குழுமத்திற்கு குறுகிய காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் சனல் ஐ யிற்கு அரசால் நிதி வழங்க முடியாததால் பணிப்பாளர்கள் குழுவின் முடிவின் படி ஐ சனல் குறுகிய கால அடிப்படையில் லைக்கா நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தியுள்ளார்.