Date:

ரயில் நிலைய உணவு கடைகளில் எலி ஓடும் அவலம்

அநுராதபுரம் ரயில் நிலைய நடைமேடையில் உள்ள உணவகத்தில் உணவு பொதி செய்யப்பட்ட அலமாரிகளில் எலிகள் சுற்றித் திரிவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனைப் பார்த்த பயணிகள் அதனை தமது கைத்தொலைபேசியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்

அதற்கமைய, ரயில்வே அதிகாரிகள் உணவகத்திற்கு சீல் வைத்ததையடுத்து, உணவகத்தை நடத்தி வந்தவர் சீலை உடைத்து உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் சுகாதார அதிகாரிகள் வந்து உணவகத்திற்கு மீண்டும் சீல் வைத்ததுடன் மறைத்து வைக்கப்பட்ட உணவை எடுத்து வருமாறு சம்பந்தப்பட்ட நபருக்கு உத்தரவிட்டனர்.

இந்த உணவகத்தை நடத்தியவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில்இ அனுராதபுரம் புகையிரத நிலையம் மட்டுமன்றி கொழும்பு கோட்டை, கண்டி, மஹவ மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ரயில் நிலையங்களிலும் இதே நபர் உணவகங்களை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு நிதியுதவி வழங்கிய “EWARDS 87” அமைப்பு..!

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சுற்று மதில் அமைப்பதற்காக...

தென்னகோன் கைது

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்களைத் தாக்கியவர்களுக்கு உதவிய...

யாழ். பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21) விசேட விடுமுறையினை...