பாடசாலை ஒன்றின் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த ஏழு வயது பாடசாலை மாணவியை களுத்துறை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
களுத்துறை கட்டுகுருந்த றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த பாடசாலையின் மலசலகூட சுவருக்கும், பாதுகாப்பு சுவருக்கும் இடையில் சிக்கியுள்ளார்.
தீயணைப்புத் துறையினர், மலசலகூடத்தின் சுவருக்கும், பாதுகாப்பு சுவருக்கும் இடையில் தள்ளும் கருவி ஒன்றை பயன்படுத்தி மாணவியைக் காப்பாற்றினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW