ராவல்பிண்டியில் இடம்பெறும் ஒருநாள் முத்தரப்பு தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க சதமடித்துள்ளார்
87 பந்துகளில் அவர் இந்த சதத்தை பூர்த்தி செய்திருந்தார்.
இது இவரது இரண்டாவது ஒருநாள் சதம் என்பதுடன், தமது கன்னிச் சதத்தையும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு எதிரான குறித்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, 4 விக்கெட்டுக்களை இழந்து 429 ஓட்டங்களை பெற்றது.
வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர், 36 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 264 ஓட்டங்களை பெற்றிருந்தது


