தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனவே நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது மாலை 06:00 மணி முதல் 08:00 மணி வரை தினசரி மின்சாரத் தேவை அதிகமாக உள்ளதாகவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.
எனவே அக்காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் மின்சாரத்தை பயன்படுத்தினால் தடைகளை குறைத்து மின்சாரத்தை வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW