தற்போது நிலவும் வறண்ட காலநிலையால் குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் இன்றைய நாட்களில் சர்வ சாதாரணமாக காணப்படுவதாகவும் எனவே, குழந்தைகளுக்கு அதிகளவு திரவ உணவுகளை குடிக்க கொடுக்க வேண்டும் எனவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா குறிப்பிடுகிறார்.
வறண்ட காலநிலையுடன் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு காய்ச்சல் போன்ற நோய்களும் பரவக்கூடும் என வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW