மீண்டும் நாட்டிற்குள் எரிபொருள் வரிசை,உரத் தட்டுப்பாடு என்பன உருவாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று(04) இடம்பெற்ற தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 29ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
கடன் நீடிப்பு பணிகளை செப்டெம்பர், ஒக்டோபர் மாதமளவில் நிறைவுச் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டாலும், பிற்பட்ட காலங்களில் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை முன்னெடுப்பதற்கான பல உதவிகளை வழங்கியிருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேபோன்று இந்த வேலைத்திட்டம் தடைப்பட்டால், வெளிநாடுகள் இலங்கையுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடாது. மீண்டும் நாட்டிற்குள் எரிபொருள் வரிசை, உரத் தட்டுப்பாடு என்பன உருவாகும்.
அரச நிதி நிர்வாகம் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பான விடயமாகும். நாடாளுமன்றத்தின் பொறுப்புக்களை நாடாளுமன்றமே நிறைவேற்றும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW