Date:

தலவாக்கலை அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் தொடர்பில் வெளியான தகவல்

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் ரேஞ்சில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் பற்றிய பிரேதப் பரிசோதனை அறிக்கை மூன்று வாரங்களுக்குப் பிறகே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலைத்தொடரில் கண்டெடுக்கப்பட்ட  பெண்ணின் சடலத்தின் பிரேத பரிசோதனை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியர்  சஞ்சய் வீரசேகரவினால் நடத்தப்பட்டது.

உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் மேலும் பரிசோதிக்கப்பட வேண்டியதன் காரணமாக பிரேத பரிசோதனை அறிக்கை மூன்று வாரங்களில் வெளியிடப்படும் என பிரேத பரிசோதனையை மேற்கொண்ட நிபுணர் சட்ட வைத்தியர் தெரிவித்ததாக லிந்துலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்த பெண் 40-45 வயதுடைய பெண் எனவும், இடது கையில் மதுசங்க என்ற பெயர் பச்சை குத்தியிருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் லிந்துலை பொலிஸாருக்கு வழங்குமாறும், பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட கிரேட் வெஸ்டர்ன் கீழ் பகுதியில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

மலை உச்சியில் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக கிரேட் வெஸ்டர்ன் மலைத்தொடரில் முகாமிட வந்த சிலர் தலவாக்கலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிரேட் வெஸ்டர்ன் மலைப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, கிரேட் வெஸ்டர்ன் காப்புக்காட்டுக்குள் நுழைவதையும் மலை உச்சியில் முகாமிடுவதையும் தடை செய்யுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர்  நந்தன கலடபா வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...