Date:

ஐந்து மாவட்டங்களுக்கு நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு!

சமனலாவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயப் பணிகளுக்காக நீர் திறந்துவிடப்பட்டால், அன்றைய தினம் முதல் ஐந்து மாவட்டங்களில் நான்கு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நான்கைந்து நாட்களுக்கு மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு தண்ணீர் திறந்து விடப்பட்டால் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மின்வெட்டு இன்றி திறந்துவிடக்கூடிய அதிகபட்ச நீரை தொடர்ந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனினும், இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டை நடைமுறைப்படுத்தி விவசாயத்திற்கு தேவையான நீரை விடுவிப்பது தற்போது அத்தியாவசியமான விடயம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்த கீதா கோபிநாத்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா...

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்- திடீர் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க...

மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக...