பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூறும் வகையில் ‘வேறுபாடுகளின்றி நல்லிணக்கத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் சனிக்கிழமை (29) காலை 9.30 மணிக்கு ஹட்டன் D.K.W மண்டபத்தில் விசேட நிகழ்வொன்று நடைபெற்றது.
மலையக சமூக செயல் நிலையத்தின் ஏற்பாட்டில் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாடு செயற்றிட்டத்தின் அனுசரணையில் பெருந்தொட்ட பிரஜைகள் மத்தியில் தேசிய மொழிக் கொள்கையை நடை முறைப்படுத்துவதின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை உறுதி செய்தல் எனும் மகுடத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர், IDM நேஷனல் கெம்பஸின் சர்வதேச செயற்பாடுகளுக்கான சமூக நலத்துறையின் தலைவரும், சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அதி வணக்கத்துக்குரிய பிதா/ அருட்கலாநிதி எஸ்.சந்துரூ பெர்னாண்டோ விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
பிரதம அதிதியாக சட்டத்தரணியும், தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்திட்ட பிரதிப் பணிப்பாளர் திரு. மா. திருநாவுக்கரசு கலந்து கொண்டார்.
அத்துடன், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர், அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் திரு. எஸ். சந்தனம் அவருடன் இணைந்து அந்த அமைப்பின் திட்டமிடல் முகாமையாளரும், நிகழ்வின் பிரதம ஒருங்கிணைப்பாளருமான ஏ.டி.முரளிஸ்வரன் உட்பட அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW