பொரளை ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர இன்று (29) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை இளம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் சுயாதீன ஊடகவியலாளருமான தரிந்து உடுவரகெதர வெள்ளிக்கிழமை (28) தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தவேளை பொரளையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்தே இன்று அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW