நாளை 8 மணி நேர நீர் விநியோக தடை

அனுராதபுரத்தின் பல பகுதிகளுக்கு நாளை (22) 8 மணி நேர நீர் விநியோக தடை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

 

 

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நீர் விநியோக தடை ஏற்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் அறிவித்துள்ளது.

 

 

நுகர்வோருக்கு சிறந்த தரமான நீர் சேவையை வழங்கும் நோக்கில், அனுராதபுரம் துருவில நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

நீர் விநியோகத் தடையால் நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வருத்தம் தெரிவிப்பதோடு, பொதுமக்கள் தமக்கு தேவையான நீரை சேமித்து, முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சிற்றுண்டிகள் மற்றும் பராட்டா விலைகளும் உயர்வு

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிற்றுண்டிகள் (Short Eats) மற்றும் பராட்டா ஆகியவற்றின் விலைகளை உயர்த்த...

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு...