எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
குறித்த யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் பொதுமுகாமையாளர் வசந்தா இலங்கசிங்ஹ குறிப்பிட்டார்.
இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டால் ஓகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW