Date:

பம்பரகலை பெரிய ராணிவத்த தோட்டத்தில் தீ

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேன பம்பரகலை தோட்ட பிரிவான பெரிய ராணிவத்த தோட்டத்தில் நேற்று இரவு 09 மணியலவில் தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட 24 தொடர் வீடுகளை கொண்ட இலக்கம் ஒன்று தொடர் விட்டு லயம் தீ பிடிக்கப்பட்டுள்ளது என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் வீடுகளில் வசித்தவர்களுக்கு உயிர் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார், இந்த பிரதேசத்தில் அதிகமாக காற்று வீசுவதால் தீயை கட்டுக்கு கொண்டுவர ஊர் மக்கள், உள்ளிட்ட பலர் போராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார ஒழுக்கு காரணமாக இந்த தீ பரவல் சம்பவம் இடம்பெற்றதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பத்து வீடுகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சொல்லப்படுகின்றது. அதேநேரத்தில் நிர்கதிக்கு உள்ளானவர்கள்  உறவினர்கள் வீடுகளிலும்,தோட்டத்தின் பொது இட கட்டடங்களிலும் பாதுக்காப்பு கருதி தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை...