ரயில் சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (24) காலை பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல புதிய ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கான ரயில் கட்டுப்பாட்டு அறையின் முயற்சிகளுக்கு எதிராக ரயில் சாரதிகள் குழுவொன்று சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று ஆரம்பித்திருந்தது.
இதன் காரணமாக நேற்று (23) சுமார் 21 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில் திணைக்களத்தின் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபோலகே தெரிவித்தார்.
அத்துடன் இன்று காலை இயக்கப்படவிருந்த சுமார் 11 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW