அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு பணம் தேவை என்பதை கணக்கிட்டு உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க மற்றும் ஆணைக்குழுவின் அதிகாரிகளை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்த ரணில், ஜனாதிபதி தேர்தலுக்காக செலவிடப்பட்ட வேண்டிய நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் உள்ளடக்கி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW