Date:

15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கிய மைத்திரி

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் செலுத்த வேண்டிய பணத்தை 10 தவணைகளில் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 28 ஆம் திகதி 15 மில்லியனை இழப்பீடாக செலுத்திய அவர், மீதமுள்ள தொகையை 2024 ஜூன் 30 முதல் 2033 ஜூன் 20 வரை கட்டம்கட்டமாக 8.5 மில்லியனை செலுத்துவதாக கூறியுள்ளார்.

தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் தங்களுக்கு கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் அவர்கள் செயல்படத் தவறியதால் உயிரிழந்தவர்களுக்கு மைத்திரிபால சிறிசேன நட்டஈடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை மைத்திரிபால சிறிசேன , முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் 97,500/- ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 54,285/ ரூபா பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்தியா நோக்கி பயணமானார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான...

தென் கடலில் பிடிபிட்ட போதைப்பொருளின் அளவு வௌியானது

தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்...

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியிலேயே கட்டுப்படுத்தினோம்

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி...

மாளிகாவத்தை மதரஸா ; 2 மௌலவிகள் கைது

மாளிகாவத்தை பகுதியில் உள்ள மதரஸா ஒன்றில் கடமை புரியும் 2 மௌலவிகள்...