நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்

நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான வானி​லை காரணமாக, டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களை உடனடியாக அகற்றுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

முறையான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மீண்டும் டெங்கு அதி தீவிரப் பெருந்தொற்று நிலைமை ஒன்று உருவாகும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

மழை காலப்பகுதியுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வரலாற்று ரீதியாகவே அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

தற்போது அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையைத் தொடர்ந்தும் பேணிச் செல்வதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

கடந்த தென்மேற்கு பருவமழை காலப்பகுதியில் ஏற்பட்ட அதி ஆபத்தான மற்றும் பெருந்தொற்று நிலைமையை வெற்றிகொள்ள பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பு பெரிதும் உதவியாக அமைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

இந்த நிலைமை மீண்டும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, அனைவரும் இணைந்து டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை உடனடியாக அகற்றுவதற்குத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, வீடுகள் மற்றும் வளாகங்களில் நீர் தேங்கி நிற்கும் இடங்களைப் பரிசோதித்து அவற்றை அகற்றுவதற்கோ அல்லது நீர் தேங்குவதைத் தடுப்பதற்கோ நடவடிக்கை எடுப்பது மிக அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மின் துண்டிப்பை அமுல்படுத்த PUCSL அனுமதி

நாட்டில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.   4 வலயங்களாக...

நாட்டில் இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.     நசனல்...