Date:

மத போதகர் ஜெரோமிற்கு எதிராக CIDக்கு சென்ற ஞானசார தேரர்

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த போதகரின் செயற்பாடுகளால் நாட்டின் மத நல்லிணக்கம் இழக்கப்படும் எனவும் புத்தரை அவமதித்துள்ளதாகவும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கிறிஸ்துவ அடிப்படைவாத கும்பல் மிக வேகமாக மதமாற்றத்தை பரப்பி வருவதாகவும், அந்த சதியில் இந்த மத போதகரும் ஒரு அங்கம் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இவருக்கு எதிராக சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கலகொட அத்தே தேரர் ஞானசார தனது முறைப்பாட்டில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த எழுத்துமூல முறைப்பாடு நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்...

ஆப்கானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இலங்கை!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...

ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில்...