முச்சக்கர வண்டிகளுக்கான விசேட வேலைத்திட்டத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆரம்பிக்கவுள்ளது.
பெற்றோலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றுவதற்கான முன்னோடி வேலைத்திட்டம் நாளை(11) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த முன்னோடி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 300 பெற்றோலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.