Date:

நுவரெலியாவில் விபத்து (Pics)

நானுஓயா நிருபர்

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் நுவரெலியா பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் குளியாப்பிட்டி யிலிருந்து நுவரெலியாவிற் கோழி உரத்தை ஏற்றி பயணித்த லொறியொன்று பெரிய வளைவு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில் லொறி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு பள்ளத்தில் இருந்த தேயிலை தோட்டத்தில் விழுந்துள்ளது.

இதன்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் இரு உதவியாளர் இருந்துள்ளனர் எனினும் அதிஸ்ட வசமாக சிறு காயங்களுடன் மூவரும் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கிறனர்.

இதேவேளை லொறியில் ஏற்பட்ட தொழினுட்ப கோராறு காரணமாக , வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது என மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு அங்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை பல வீதித்தடைகளை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஓய்வூதியம் கேட்டு ஜெனீவா செல்லும் முன்னாள் எம்.பிக்கள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்வதை எதிர்த்து ஓய்வு பெற்ற...

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்

தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்து, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி...

அதிகாலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு...

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...