களுத்துறையில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று காலை (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை, இசுரு உயன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.







