Date:

பரசிட்டமோல் அருந்திய சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 7 வயதுச் சிறுமி ஒருவர் அதிகளவு பரசிட்டமோல் மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார்.

உடஹெந்தென்ன, உடுவெல்ல தாமரவல்லி கொலனி சேர்ந்த ஷாமலி தருஷி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நளின் ஏ. மெதிவக மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் போது தெரிய வந்தது.

குறித்த சிறுமி உடுவெல்ல கனிஷ்ட கல்லூரியில் தரத்தில் கல்வி கற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பளை குருந்துவத்தை வைத்தியசாலையில் இருந்து இரண்டு தடவைகள் அவருக்கு பெற்றோர்கள் மருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவிற்குப் பதிலாக வைத்தியசாலையின் மருந்தகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வயது வந்தோருக்கான டோஸ் குழந்தைக்கு வழங்கப்பட்டதால், குழந்தைக்கு இந்த அதிக டோஸ் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.

குருந்துவத்தை வைத்தியசாலையில் இருந்து தினமும் சுமார் அறுநூறு நோயாளர்கள் சிகிச்சைக்காக வருவதாகவும் அவர்களுக்கு மருந்து வழங்குவதற்கு ஒரு மருந்தாளுனர் மாத்திரமே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...