இலங்கையின் பல்வேறு பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இதன் முழுமையான வீச்சு குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் மின் விநியோகம் எப்போது சீராகும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

