Date:

அக்குறணை ஷியா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர், தாதி மீது தாக்குதல் -அலவத்துகொடயில் சம்பவம்

அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட அக்குறணை ஷியா ஞாபகார்த்த வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் தாதியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வண்டியை அப்புறப்படுத்துமாறு வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் கூறியதனையடுத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் அக்குறணை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு உத்தியோகத்தரும்  தாதியும் ஷியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உண்ணாவிரதப் போராட்டத்தில் சஜித்

தங்களைக் கல்விச் சேவையில் உடனடியாக உள்வாங்குமாறு கோரி இலங்கை பாடசாலை அபிவிருத்தி...

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெட்ரோலிய பொருட்கள், எரிவாயு...

தங்க மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சி…

உலகத் தங்க மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச...

ஜனவரியில் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் பணவீக்கம்…

2026 ஜனவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற...