காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் இந்த நாட்களில் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் இந்த வைரஸ் தொற்றுநோய்களைத் தவிர்க்க வேண்டும் என்றுள்ளனர்.
ஏனெனில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்கள் உயிரைக் கூட இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க, இந்த நாட்களில் மக்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என வைத்தியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.