பல பகுதிகளுக்கு 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிக்கு எதிர்வுகூறல்!

மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அத்துடன், வட, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

எக்னெலிகொட வழக்கு: சுரேஷ் சலே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, அரச உளவுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே...

ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன!

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, காலி வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக்...