பொதுபல சேனா அமைப்பில் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணத்தில் இணைந்து கொண்ட பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்தும் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகிலுள்ள வீதியில் தங்கியுள்ளனர்.
நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் வந்தடைந்த இந்த குழுவினர், ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான முடிவொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினர்.
பின்னர் ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க அவ்விடத்துக்கு வருகை தந்து பிக்குமாரை சந்தித்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில், அதன்போது பிக்குமார் தமது ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தியிருந்தனர்


