Date:

நீர்கொழும்பு கொச்சிக்கடையில் சஹ்ரான் ஹாஷிமின் மைத்துனரும் அவரது மனைவியும் கைது

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு மூன்று வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சஹ்ரான் ஹாஷிமின் மைத்துனரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குளியாப்பிட்டிய கட்டுபெத்த பிரதேசத்திலிருந்து கொச்சிக்கடை பகுதியில் உள்ள தனது மனைவியின் பெற்றோரின்  வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது கொச்சிக்கடை பொலிஸாரால் இவர்கள்  கைது செய்யபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உயிர்த்த ஞாயிறு  தாக்குதலின் மூளையாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமாவின் சகோதரர் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி  தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகத்தின் பேரில் கொச்சிக்கடை பொலிஸாரால் இவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 2019 ஆம் ஆண்டு முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டு 2022 செப்டெம்பர் 23 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டவராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’பங்கர் பஸ்டர்’ குண்டுகளால் அமெரிக்கா அதிரடி தாக்குதல்

மத்திய கிழக்கில் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் மலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள...

உச்சக்கட்டப் பதற்றத்தில் மத்திய கிழக்கு

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ்...

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...