புறப்பட்டு ஒரு மணித்தியாலத்தின் பின் ஶ்ரீலங்கன் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டமையினால் குறித்த விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டது.
துபாய் நோக்கி புறப்பட்ட விமானத்தில் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.
சுமார் 15 மணித்தியாலங்கள் தாமதமாக துபாய் நோக்கி புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டது.
நேற்று (07) மாலை 06.25 மணிக்கு குறித்த விமானம் துபாய் நோக்கி பயணிக்கவிருந்தது. எவ்வாறாயினும், குறித்த விமானம் இன்று காலை 09.30 மணிக்கே பயணத்தை ஆரம்பித்தது.