சமிதா கவிரத்னவின் மனைவி கத்திக்குத்துக் இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருவளை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினரின் மனைவி பேருவளை ஹெட்டமுல்ல பிரதேசத்தில் நடத்தி வரும் கடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 அங்குல நீளமான கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.