கொழும்பு – கோட்டை குணசிங்கபுர பஸ் நிலையங்களுக்குள் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் ஆகியோர் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்தார்.