இரண்டாம் நாள்
நேரம் காலை 8 மணி
ஜனாதிபதி செயலலகம் முன் தற்போதைய நிலைமை
தேரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சுமார் ஒரு மாத காலத்திற்குள் பதிலளிக்கப்படும் என ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் பிக்குகளிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், பதிலளிப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள பிக்குகள், தமது கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்கான உறுதியான திகதியொன்றை அறிவிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் அமர்ந்து தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகளுக்குத் தெளிவான பதில் வழங்கப்படாத நிலையில், பிக்குகள் அந்த இடத்திலிருந்து வெளியேறாமல் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிக்குகள் தொடர்ந்தும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தங்கியிருப்பதால், அப்பகுதியில் விசேட பொலிஸ் குழுக்கள் பல பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.



