மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், புவிசார் அரசியல் மற்றும் பூகோள பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் இடம்பெறும் ரைசினா மாநாட்டில் பங்கேற்க இந்தியா சென்றுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து சுதந்திர சிந்தனைக் குழுவான அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (Observer Research Foundation) இந்த மாநாட்டை நடத்துகிறது.
குறித்த மாநாடு 2016 ஆம் ஆண்டு முதல் புது டில்லியில் வருடாந்தம் நடத்தப்படுகின்றது.
இந்த மாநாட்டில் சர்வதேச சமூகம் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க உலகெங்கிலும் உள்ள கொள்கை ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் துறை சார் நிபுணர்கள் கல்வியாளர்களை ஒன்றிணைக்கும் பலதரப்பு மாநாடு ஆகும்.
வெளியுறவு அமைச்சர் ஷாஹித் இந்தியா செல்வது இது முதல் தடவையல்ல படந்த ஒகஸ்ட் 2022 யில் அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்தார். ஜனாதிபதி சோலிஹ் பதவியேற்றதில் இருந்து மாலத்தீவின் மூத்த அரசு அதிகாரிகள் அடிக்கடி இந்தியாவுக்குச் செல்வது, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவைக் எடுத்துகாட்டுகின்றது.