குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா ‘ஏ’ மற்றும் ‘பி’ ஆகிய இரண்டு நோய்கள் வேகமாக பரவி வருவதாகத் தெரியவந்துள்ள நிலையில், பிள்ளைகளின் உடல்நிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
இருமல், காய்ச்சல் அல்லது சளி மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும், இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.