ரஷ்ய பிரஜை ஒருவர் கடலில் மூழ்கிய போது அருகிலிருந்த சுற்றுலா வழிகாட்டிகள் மூவர் அவரைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மொரகல்ல கடற்கரை பகுதியில் நீராடிக் கொண்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ரஷ்ய பிரஜை மொரகல்ல பிரதேசத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த நிலையில், குளிப்பதற்காக கடலுக்கு சென்ற போது கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அதிஷ்டவசமாக சம்பவ இடத்திலிருந்த வழிகாட்டிகள் குறித்த சுற்றுலாப் பயணியைக் காப்பாற்றி உள்ளனர்.