இலங்கையில் திருடன் ஒருவன் வித்தியசமான முறையில் திருடிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பின்னர் குறித்த பணப்பையை இழந்த நபருக்கு தபால் மூலம் பொதி ஒன்று கிடைத்துள்ளது.
குறித்த தபால் பொதியில் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட தான் பறிகொடுத்த முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன.
மேலும் அந்த பொதியில் முக்கியமாக குறிப்பு ஒன்றையும் எழுதிவைத்துள்ளான், “உங்களை கடவுள் ஆசி வழங்கியுள்ளார். எனக்கு ஒரு பணத்தேவை இருந்தது. இதனால் தான் பணத்தை எடுத்தேன். இல்லை என்றால் பணத்தையும் திருப்பி அனுப்பியிருப்பேன். இந்த நேரத்தில் அது பெரிய உதவியாக இருந்தது. அத்துடன் உங்கள் பேர்ஸ் மிகவும் பழையதாக இருந்தது. புதிதாக ஒன்று வாங்குங்கள். இல்லை என்றால் இந்த கடிததத்துடன் அதனையும் அனுப்பி வைத்திருப்பேன். நீங்கள் ஒரு தானம் செய்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி” என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடித்தை ஆவணங்களை இழந்த அதன் உரிமையாளர் இந்த விடயத்தை சமூக வலைத்தளங்களில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.