கண்டி – மஹியங்கனை பிரதான வீதி மூடப்பட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்தியுள்ளனர்.
நேற்று (19) மாலை பெய்த கனமழை காரணமாக 18வது வளைவு மற்றும் இரண்டாவது வளைவுக்கு அருகில் பாறை, மண் மேடு சரிந்து விழுந்ததில் குறித்த வீதியுடனான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நிலச்சரிவு பகுதிக்கு மேல் மற்றொரு இடத்தில் பெரிய பாறை சரிவு ஏற்படும் அபாயம் உள்ளமையினால் குறித்த வீதியை மூட பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் தண்ணேகும்புர சந்தியில் வலப்புறம் திரும்பி ரன்தெனிகல வீதியில் பயணித்து ரஜ மாவத்தை சந்தியில் இடதுபுறமாக மஹியங்கனை நோக்கி பயணிக்க முடியும் என்பதுடன், மஹியங்கனையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ரஜமாவத்தை சந்தியில் வலப்புறம் திரும்பி ரன்தெனிகல வீதியூடாக பயணித்து தன்னேகும்புர சந்தியில் இடப்புறம் திரும்பி கண்டி நோக்கி செல்ல முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.