களுத்துறை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
தமது கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ‘நவ லங்கா நிதஹஸ் பக்ஷய’ கட்சி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது
அதற்கமைய, குறித்த மனுவின் விசாரணை நிறைவடையும் வரை இத்தடையுத்தரவு அமுலில் இருக்குமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த மனு மீதான விசாரணை மே 12ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, கல்முனை மாநகர சபை தேர்தல் தொடர்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அமைய, குறித்த சபைக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அது தவிர எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.