Date:

BREAKING -ரயில்வே திணைக்களத்தின் சகல ஊழியர்களினதும் விடுமுறை உடனடியாக ரத்து!

அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ரயில்வே திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி வெளியிட்பட்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2321/07 இன் படி, ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ரயில் சேவையின், அனைத்து ஊழியர்களினதும் விடுமுறையை இன்று (14) முதல் உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்வதற்கு ரயில்வே பொது முகாமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவையை தடையின்றி, வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்ல நாளை (15) பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ஊழியர்களிடமும் அது தொடர்பான அறிக்கையை கோருமாறு ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க அனைத்து திணைக்கள தலைவர்களுக்கும் பணிபபுரை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளை முதல் மாட்டிறைச்சிக்கு புதிய நிர்ணய விலை

மன்னார் மாவட்டத்தில் நாளை (10) முதல் அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை...

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி மனநிலையுடன் இருக்கிறாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று...