கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் இருந்து பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பு – கோட்டை முதல் மட்டக்களப்பு நோக்கி பயணிக்க இருந்த பாடுமீன் ரயிலின் கழிப்பறையில் இருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் குறித்த சிசு நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிசுவை, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த சிசுவை ரயிலில் கைவிட்டுச் சென்றவரைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.